எல்லா வகையிலும் இன்றைய மனிதன் அரசியல் கலாச்சாரம் / பண்பாடு... என்ற தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகள்தான். தொழுவத்துக்குள் அவனோ அவளோ சுதந்திரமாக நடமாடலாம். சிரிக்கலாம். குதிக்கலாம். உறங்கலாம். அழலாம். மற்றபடி தொழுவத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பது மட்டுமே அவனுக்கு / அவளுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. மீறினால் சவுக்கடி. விளைவு, எல்லாவற்றுக்கும் பயந்து குகைக்குள் பதுங்கும் ஆதிமனிதனின் இயல்பே இன்றைய மனிதனின் மன அமைப்பாகவும் ஆகியிருக்கிறது. இடையில் சேகரமான அனைத்து வாழ்க்கை அனுபவ மூலதனங்களும், செல்வங்களாக நிரம்பிய வாழ்க்கைச் சார் புரிதல்களும் கேட்பாரற்று தொழுவத்துக்கு வெளியே மழையிலும் வெய்யிலிலும் பனியிலும் புயலிலும் வெள்ளத்திலும் நனைந்தபடி இருக்கின்றன. இந்த மூலதனங்களையும் செல்வங்களையும் தொழுவத்தில் நடமாடும் ஒரு மாடு, தன்னுடன் இருக்கும் பிற மாடுகளுக்கு சுட்டிக் காட்டி விவரித்து அதைக் கைப்பற்ற வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொன்னால் எப்படி இருக்கும்..? சீனிவாசன் நடராஜன் எழுதியிருக்கும் ‘புனைவு' நூல் அப்படியானதுதான்.
- கே.என்.சிவராமன்
Be the first to rate this book.