தமிழகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறந்த உருக்கை உற்பத்தி செய்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. சிலுவைப் போர்களின் வெற்றி தோல்வியை இந்த உருக்கே தீர்மானித்தது.
தமிழகத்தில் குறிப்பாக சோழ நாட்டில் வேளாண் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததும் கொல்லர்களும், தச்சர்களும் இறுக்கமான சாதிகளாக மாற்றப்பட்டு கிராமங்களில் அடைக்கப்பட்டனர்.
சிறந்த உருக்கை உற்பத்தி செய்து வந்த கொடுமணல் போன்ற நகரங்கள் கைவிடப்பட்டன.
நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அதே உருக்கு டமாஸ்கஸ் உருக்கு என்ற பெயரில் தமிழகம் வந்து சேர்கிறது. ஆனால் இப்போது அது அரபுப் புரவிகளின் மேல் அமர்ந்து, ஈரானியக் கவசம் அணிந்து, மங்கோலிய விற்களைத் தோட்களில் தாங்கியிருந்த வீரர்களின் கரங்களில் இருக்கிறது.
மாலிக்காபூரின் வருகைக்குப் பின்பு தமிழகத்தில் இருந்த ஒரே பேரரசான பாண்டிய அரசு சிதறி வடக்கே உள்ள ஒவ்வொரு அரசும் தெற்கு நோக்கிப் படையெடுக்கும் நிலை தோன்றியது.
தமிழகம் தனது மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை இழந்ததற்கு சாதியை அடிப்படையாகக் கொண்ட வேளாண் பொருளாதாரமும், பழங்குடி மக்களை சாதிகளாக மாற்றியதும் காரணம் என்ற கோணத்தில் ஒரு உரையாடலாக இந்த நூல் வெளிவருகிறது.
Be the first to rate this book.