ஒரு படைப்பாளி தன்னை பரந்துப்பட்ட வாசகனாகத் தகவமைத்துக்கொள்கிற தருணம்தான் உன்னதமானது. கவிஞனின் முழு என்பது சகப் படைப்பாளியின் எழுத்துகளில் உள்ள வியப்புகளை உணர்ந்து வெளிப்படுத்தும்போது நிகழ்கிறது. புல்வெளி ஓசையில் கவிஞர் ஆண்டன் பெனியின் இன்னொரு பரிமாணம் வெளிப்பட்டிருக்கிறது.
விமர்சனம் பற்றிய தனது கருத்தாக “மற்றவர்களின் வலிமையைத் தேடுவது மிகவும் மதிப்புமிக்கது. அவர்களின் குறைபாடுகளை விமர்சிப்பதன் மூலம் நீங்கள் எதையும் பெற முடியாது” என்கிறார் ஜப்பானிய கவிஞரும் தலைவருமான தைசகு இகெதா.
தனது விசாலப் பார்வையின் மூலம் படைப்புகளின் நேர்நிலைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முனைந்திருக்கிறார் கவிஞர் ஆண்டன் பெனி. இப்படியான மனநிலை ஓர் படைப்பாளியை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
Be the first to rate this book.