ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்கள் வெளியுலகம் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தி தங்கள் பண்பாட்டை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அமைத்துக்கொண்டவர்கள். அந்நிலத்தை 'நாகரீக' உலகம் கண்டடைந்தபோது அது பேரழிவாக ஆகியது. பின்னர் ஒரு புதிய உலகம் அங்கே உருவாகி வந்தது ஜெயமோகன் தன் துணைவியுடன் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பயணம் ஒன்றின் பதிவு இந்நூல். அந்த புதிய நிலத்தை மிக விரிவான தகவல்களுடன் நுணுகி ஆராய்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.