இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரோ பற்றி எழுதியுள்ள புல்லினும் சிறியது எனது நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். இது அமெரிக்காவிலுள்ள தோரோவின் வால்டன் குளத்தைப் பார்வையிட்ட எனது அனுபவத்தையும் தோரோவின் வாழ்க்கையையும் விவரிக்ககூடியது.
- எஸ். ராமகிருஷ்ணன்
இயற்கையை வெறும் கண்களால் பார்த்து தெரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள். அது உண்மையே இயற்கை என்றவுடன் நமக்குப்பச்சை நிறமே நினைவிற்கு வருகிறது. ஆனால் இயற்கையின் நிறம் பச்சை மட்டுமில்லை. செம்பழுப்பும் மஞ்சளும் இளஞ்சிவப்பும் இயற்கையின் நிறங்கள்தானே. மனதை நாம் பசுமையோடு மட்டுமே பழக்கி வைத்திருக்கிறோம், இயற்க்கையைக் காணுவது ஒரு கலை அதை நாம் முயன்று பழக வேண்டும்.
Be the first to rate this book.