பாரதிமணி என்கிற மனிதன் எதனை அசலானவன், வெளிப்படையானவன். தட்சிண பாரத நாடக சபைக்கு வெளியே, தன் சொந்த வெளியில் அவன் எந்த வேடமும் இட்டிருக்க, துளியும் நடித்திருக்க வாய்ப்பில்லை. இல்லையென்றால் அவருக்கு எப்படி எதனை மனிதர்கள் வாய்ப்பார்கள்? என்ன ஒரு நம்பகத்தன்மை இருந்தால் அத்தனை கடலும் அவருக்கு வழிவிட்டிருக்கும்? எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது எத்தனை அரிய கனிவு!
- வண்ணதாசன்
பாரதிமணியிடம் எனக்கோர் வேண்டுகோள் உண்டு. உடல் சோர்வை, மனச்சடைவை, அலுப்பைப் பொறுப்படுத்தாமல் அவர் தனது சேகரத்தில் உள்ள அனைத்தையும் இளைய தலைமுறைக்குக் கடத்திவிட முயல வேண்டும்.ஜென்துறவி சொன்னதுபோல், காளிக்கிண்ணமாக ஆகிவிட வேண்டும்.
- நாஞ்சில்நாடன்
நுண் தகவல்களினால் ஆன ஒரு குட்டிச் சுயசரிதை பாரதிமணியின் இந்த நூல்.சின்னச்சின்ன தகவல்களை முக்கியப்படுத்திச் சொல்ல வேண்டுமென்பது நல்ல எழுத்தாளர்களுக்கு உரிய கோணம். பாரதிமணியிடம் அந்தக்கோணம் சிறப்பாகவே செயல்படுகிறது என்பதற்கு இந்நூல் ஒரு ஆதாரம்.வரலாற்றின் உள்மடிப்புகளைத் தெரிந்துகொள்ள இந்நூலைப் போன்ற தனி நபர் வரலாறுகள் மிகப் பெரிய சான்றாதாரங்கள்.
- ஜெயமோகன்
Be the first to rate this book.