ஒரு புத்தகம் கொடுக்கும் வாசிப்பனுபவம் மீயதார்த்த அனுபவத்திற்கு நிகரானது. அந்த அனுபவத்திலிருந்து நம் சொந்த வாழ்க்கையைப் பார்க்கையில், வெளிப்பார்வைக்குத் தொடர்பற்றவை போல் தோற்றமளிக்கும் ஒரே பொருளின் இரு வேறுபட்ட பகுதிகளைத் தொடர்புறுத்துகையில், புதிரின் விடையை நோக்கிய பயணம் கூடுதலான சுவாரஸ்யத்தையடைகிறது. குழந்தைப் பருவத்தில் பிடித்துப்போய்விடும் ஒரு பதார்த்தத்திற்கு வாழ்நாள் முழுக்க அடிமையாக இருப்பதுபோலத்தான் எனக்குப் புத்தகங்களும். புதிய புத்தகத்தைப் பிரித்ததும் தாளின் வாசனையை அனிச்சையாக முகர்ந்து பார்ப்பதுபோல் கொஞ்சம் புத்தகங்களின் வாசனைகளை இந்த நூலில் பிடித்துவைக்க முயன்றிருக்கிறேன். அனுபவப்பகிர்வுகளாக ஓரிரு கட்டுரைகளும், புத்தகங்கள் கிளர்த்திய நினைவுக் குறிப்புகளாகவும் விமர்சனம் மற்றும் மதிப்பீடுகளாகவும் இக்கட்டுரைகள் அமைந்து வந்திருக்கின்றன.
Be the first to rate this book.