ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை. நம் பழமையையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் கதை. நம் வரலாற்றில் உள்ள வெற்றிடங்களைக் கற்பனையைக் கொண்டு அழகாக நிரப்ப முயலும் கதையும்கூட. கற்பனையும் வரலாறும் இத்தனை அழகாக, இவ்வளவு நெருக்கமாக இதுவரை ஒன்றையொன்று தழுவிக்கொண்டதில்லை.
இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல. மக்களே இதில் பிரதானம். எளிய மனிதர்களே இதில் அசாதாரணமான கதாநாயகர்களாகவும் நாயகிகளாகவும் வெளிப்படுகிறார்கள். அவர்களுடைய சாமானிய வாழ்க்கை அனுபவங்களைதான் நாவல் சொல்கிறது என்றாலும் இதிலிருந்து ஓர் அற்புதமான மானுட தரிசனத்தை நாம் பெறமுடியும்.
தமிழர்களின் காதல், மானம், வீரம், இலக்கியம், கேளிக்கை, உணவு, வர்த்தகம், வழிபாடு, கட்டடக்கலை, அரசியல் என்று அனைத்துப் பரிமாணங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன. தமிழர்கள் எப்படிச் சிந்தித்தனர், எப்படிப் பயணம் செய்தனர், எப்படிப்பட்ட கப்பல்களைக் கட்டினர், எப்படித் தங்களை அலங்காரம் செய்துகொண்டனர், எப்படி உரையாடினர், எப்படிப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தினர், எத்தகைய இசைக் கருவிகளைக் கையாண்டனர், அவர்களுடைய இல்லங்களும் வீதிகளும் கடைத் தெருக்களும் எப்படி அமைந்திருந்தன அனைத்தும் வெறும் தகவல்களாக அன்றி, கதையோடு ஒன்றுகலந்து அசரடிக்கின்றன.
‘குமரிக்கண்டமா சுமேரியமா?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய பா. பிரபாகரனின் இந்த முதல் நாவலை ஒரு பொக்கிஷம் போல் தமிழுலகம் பாதுகாக்கப்போவது உறுதி.
Be the first to rate this book.