நவீனத் தமிழின் முன்னோடி எழுத்துக் கலைஞரான புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்', 'துன்பக்கேணி' ஆகிய இரு கதைகளை சென்னைப் பல்கலைக் கழகம் 2014இல் தனது பாடத் திட்டத்திலிருந்து நீக்கியது. துன்பக்கேணி தலித்துகளை அவமதிப்பதாகவும் அக்கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே பல்கலைக்கழகத்தின் மேற்படி நடவடிக்கைக்குத் தூண்டுதலாக அமைந்தது.
ஒரு படைப்பை அழகியல் பிரதியாகவும் சமூக உண்மைகளை வெளிப்படுத்தும் ஆவணமாகவும் பார்க்கும் பார்வைக்குப் பதிலாக வெறும் அரசியல் பிரதியாகவும் ஒற்றைச் சார்பானதாகவும் எடுத்துக் கொண்டதன் விளைவு இந்தத் தடை. இந்தப் போக்குக்கு எதிரான உண்மை நிலையை பல்துறை அறிஞர்களின் சான்றுகளோடு முன்வைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.