இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
1951இல் முதலில் வெளியான இந்நூலுக்கு விரிவான முன்னுரை, ஆய்வுக் குறிப்புகள், படங்களுடன் மறுபதிப்பைத் தயாரித்திருக்கிறார் புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கியுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி.
Be the first to rate this book.