மூலநூலின் ஒட்டுமொத்தமான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் அழகியதொரு கோவையாக ஆக்கித் தந்தமையைப் பாராட்டலாம். மூலநூலே மிகச் சிறப்பாக இருக்க, ஏதற்கு இந்த வார்ப்பிலக்கிய வேலை? என்று சிலர் வினவலாம். மூலத்தின் சுவையை அணுகி அதில் திளைக்க ஒரு வாயிலாக இருப்பது வளர்ப்பிலக்கியப் பணி. வார்ப்பிலக்கியம் வழியே மூலநூலுக்குப் பெருமை சேர்ப்பதும், எல்லோருக்குமானது இலக்கியம் என்பதை அதன்வழி உணர்த்துவதும் வார்ப்பிலக்கியப் பண்பு, இன்றைய தலைமுறையினருக்கு இலகுவாக ஒன்றைச் சொல்லி அரியவற்றைப் புரியவைப்பது இன்றியமையாத்து. From known to unknown என்று குறிப்பிடுவதை இலக்கியத்திற்கும் பொருத்தலாம். வார்ப்பிலக்கியப் பணிக்கும் இது மிகப் பொருந்தும். இந்த வகையில் கவிஞர் துறவி புதுமைப் பொலிவான நடையில், நளவெண்பாவை அழகியதோர் சொல்லோவியமாகத் தீட்டி வெற்றி பெற்றுள்ளார்.
Be the first to rate this book.