முத்தொள்ளாயிரத்தை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் இப் பனுவல் தமிழரின் பண்பாட்டுத் திறங்களை, ஓவியமாக்கி உயிர்ப்புடன் உருக்காட்சிகளாக்கிய பெருமையுடையது என்பதில் எவருக்கும் அய்யமில்லை. அரும்பெரும் நயங்களும் தொனிகளும் சந்தம் அமைந்த சொல்லாட்சிகளும் மிகுந்த பாடற்செல்வம் முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய மன்னர் பற்றிக் குறிப்பிட்டுச் சால்பு குறையாமல் திகழும் இந்நூலின் பெருமை தமிழின் பெருமை. ஆராய்ந்து புது உண்மைகள் கண்டறியத் தகும் இலக்கியமும் முத்தொள்ளியிரம் எனலாம்.
Be the first to rate this book.