மகாத்மா காந்தி கனவு கண்டதுபோல், இருப்பவருக்கும் இல்லாதவருக்குமான மாபெரும் இடைவெளி என்றைக்கு மறையும்? கடைக்கோடி ஏழைக்கு தேசத்தின் வளர்ச்சிகள் என்றைக்குப் போய்ச் சேரும்? ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் கண்ணீரும் என்றைக்குத் துடைக்கப்படும்? மாபெரும் இந்த சவாலை எதிர்கொள்வதற்கான வழிகளை நேர்மையாக, துணிச்சலாக முன்வைத்து இருக்கிறார் நாராயண மூர்த்தி. மிகப் பெரிய மக்கள் திரளுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால் நல்ல மதிப்பீடுகளும் தலைமைப்பண்பும் எந்த அளவுக்கு அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க கல்வி, அரசியல் மற்றும் வணிகத்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி விரிவாக விவரித்திருக்கிறார். நாராயண மூர்த்தி இந்த நூலில் தூவி இருக்கும் விதைகள் நாளைய இந்தியாவைச் செழிப்பாக வளர்த்தெடுக்க உதவும்.
Be the first to rate this book.