சப்னாஸ் ஹாசிமின் முதல் சிறுகதைத் தொகுப்பு - பிரேமகலகம். ஆனால், அவரது எழுத்தினூடே இக்கதைகளில் நாம் பலகாலம் எழுதிப் பண்பட்டதுபோன்ற ஓர் எழுத்தை எதிர்கொள்கிறோம்; தேர்ந்த பக்குவம்பெற்ற அசலான எழுத்தின் வழியே தன்னை முன்வைக்கிறார். அவரது சொந்த மண்ணான கிழக்கு இலங்கையின் மண்ணும் மனிதர்களும்தான் இக்கதைகளின் பேசுபொருள். அதிலும் அவர்களின் அன்பை, நேசத்தை, இயல்பை பிரதானப்படுத்தும் கதைகள் இவை. உண்மையில் ஒரு நெசவு போலத்தான் களம், கதாபாத்திரம், நுட்பாமான அவதானிப்பு, கதைசொல்லும் உத்தி என்று அனைத்து விதங்களிலும் பார்த்துப் பார்த்துப் படைப்பை நெய்திருக்கிறார். கவிதையும் உரைநடையும் ஒன்றோடொன்று முயங்கிய மொழிநடைச் சொற்கள் நம்மை உணர்வுகளோடு உள்ளிழுத்துக்கொள்பவை. முற்றிலும் புதிய புத்துணர்ச்சியான அணுகுமுறை கொண்ட கதைகள்தான் இவரது குறிப்பிட்டுச் சொல்லும்படியான அடையாளம். தானும் தனது உடன் சார்ந்தோர்களிடமிருந்தும் இக்கதைக்களுக்கான தருணங்களைச் சப்னாஸ் கண்டடைந்திருக்கிறார்; அத்துடன் வட்டார வழக்குச் சொற்களையும் சேர்த்துச்சொல்லலாம். அதை அவரது எழுத்தின் இடைவெளி எங்கும் நீங்களும் படித்துணர்வீர்கள். இத்தொகுப்பு நமக்குத் தரும் புத்துணர்ச்சியின் வழியே ஓர் ஆகச்சிறந்த உத்தரவாதமான கதைசொல்லியை முன்வைக்கிறது – சிறப்பு...
- செண்பகக் குழல்வாய்மொழி
Be the first to rate this book.