பிரேம் (1965) தனது 21-ஆவது வயதில் பிரேதா என்ற பெயருடன் எழுதி கிரணம் இதழில் வெளிவந்த இப்படைப்புகளை எனது 25 – ஆவது வயதில் வாசித்தபோது அதிர்ச்சியோடு, பேசப்படாத மறைமுக உலகின் துயரார்ந்த, வலி மிகுந்த குரல்களின் தாபங்களையும் இருண்ட சுரங்கப்பாதைகளில் மறைந்து திரியும் ஒடுக்கப்பட்ட குற்றவாளிகளின் நடத்தையும் பாலியல் இச்சையையும் உளவியல் தன்மைகளையும் அத்துடன் இணைந்த சமூக விசித்திரங்களையும் மனத்தடையற்று எப்படி இவரால் பதிவுசெய்ய முடிந்தது என ஆச்சரியம் அடைந்தேன். ஒரு வகையில் தடை செய்யப்பட்டு மறைமுகமாக உலவும் பிரதிகளின் வலையில் சிக்கிக் கொண்டேனோ என்றுகூட அச்சம் ஏற்பட்டது.
Be the first to rate this book.