முகலாய சாம்ராஜ்யத்தை இந்திய மண்ணில் ஏற்படுத்திய பாபர் தொடங்கி ஔரங்கசீப் வரை பலரைப் பற்றியும் நாம் நமது பள்ளிக் காலத்திலேயே அறிந்து கொள்கிறோம். முகலாயர்களை பற்றித் அறிந்துகொண்ட அளவிற்கு, அவர்களை எதிர்த்துத் தீரத்துடன் போர்புரிந்த மண்ணின் மைந்தர்களான ராஜபுத்திரர்களைப் பற்றி அறிந்துகொண்டிருக்கிறோமா என்றால், இல்லை. இக்குறையைப் போக்கும் வகையில் ராணா பிரதாப் குறித்த இந்த நூல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர் பிரதாப். இளமைக் காலம் தொடங்கி மேவாரின் ராணாவாகப் பட்டமேற்றது வரையிலான இவரது வாழ்வு மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அக்காலத்திய ராஜபுத்திரர்கள் அனைவரும் அக்பரிடம் பணிந்தபோதிலும் பிரதாப் மட்டும் பணியாமல் அவருடன் சமரசமற்ற போரில் ஈடுபட்டது, போதிய உணவின்றித் தனது மனைவி குழந்தைகளுடன் காடு மேடுகளில் சுற்றித் திரிந்தது, இழந்த பகுதிகளை மீட்டது என்று புத்தகமெங்கும் அரிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
பிறந்த மண்ணையும் பின்பற்றிய சமயத்தையும் தனது இரண்டு கண்களாகக் கருதிய ராணா பிரதாப்பின் வாழ்வு ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம்.
உணர்ச்சிப் பெருக்குடன் உயிரோட்டமான நடையில் சக்திவேல் ராஜகுமார் இந்த நூலை எழுதி இருக்கிறார்.
Be the first to rate this book.