தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற சிறப்பு மட்டுமின்றி புனைவு என்ற வகையில் பல புதுமைகளையும் தாங்கி வந்த இலக்கிய முக்கியத்துவம் நிறைந்த நாவல்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த இந்நாவல் அக்கால குடும்ப உறவுகளைப் பற்றிப் பேச முனைந்தாலும் நீதி நேர்மை என்ற பதங்களை மையமாகக் கொண்டு நற்பண்புகளையும், அறநெறிகளையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
செய்யுள் நடையிலேயே நிலைத்திருந்த தமிழ் இலக்கியத்தில் உரைநடை இலக்கியத்தை அடையாளப்படுத்திய இந்நாவலே பின்னாளில் வந்த பல படைப்புகளுக்கும் முன்னோடி என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.