பிரகலாதன் இந்து சமயத்தின் புராணங்களின் படி தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் (இரணியகசிபு) என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான் கடவுள் அல்லர், அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற முடியவில்லை. எத்துணை துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். பாகவத புராணம் பிரகலாதனின் விஷ்ணு பக்தியைப் பற்றி எடுத்தியம்புகிறது. புராணங்களில் பெரும்பாலும் பாலகனாகவே குறிப்பிடப்படுவதால் ஓவியங்களிலும் காட்சிகளிலும் பிரகலாதன் சிறுவனாகவே சித்தரிக்கப்படுகிறான்
Be the first to rate this book.