அடேங்கப்பா! சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட பிரதோஷ நேரத்தில் இவ்வளவு பக்தர்கள் கூட்டம் அலைமோதியதில்லை. இன்று சின்னஞ்சிறு சிவாலயத்தில்கூட அடியார் திருக்கூட்டத்தின் பெரிய அணிவகுப்பு! வில்வ இலையும் அருகம்புல்லும் அபிஷேகத்துக்கென பால் பாக்கெட்டுமாகத் திரண்டுவிடுகிறார்கள். நமசிவாயத்தின் சிறப்பை நாடறிந்துவிட்டது. அன்று உலகைக் காப்பதற்காக நஞ்சுண்டவனுக்கு, இன்று குளிரக்குளிர பாலபிஷேகம்! அபிஷேகப்பிரியன் ஆனந்தப்படுகிறான். அவனை வழிபடும் அத்தனைபேரையும் ஆனந்தப்படுத்துகிறான். வெகு பிரசித்தியடைந்திருக்கும் பிரதோஷ வழிபாட்டைப்பற்றி, சகல தகவல்களுடன் இப்படிப்பட்ட ஒரு நூல் வெளிவருவது இதுவே முதல் முறை. நம பார்வதிபதயே! ஹரஹர மகாதேவா!!
Be the first to rate this book.