அருள்ஜோதியின் இந்த முதல் கவிதைத் தொகுப்புக்கு இரண்டு மையப் பண்புகள் உள்ளன. ஒன்று, கவிஞர் எதிர்கொள்ளும் சமூகம் சார்ந்த விஷயங்கள் தரும் அகநெருக்கடிகளிலிருந்து கிளைக்கும் கவிதைகள். இன்னொன்று சந்திப்பு, உறவு, பிரிவு என்ற மூன்று புள்ளிகள் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும் தருணங்களில் கிளைக்கும் கவிதைகள். தனிமனித அகமும் சமூக மனித அகமும் சேர்ந்து எழுதிய நூல் இது எனலாம். பூடகமான மொழி சமத்காரங்கள் ஏதுமற்று, மிக சரளமான மொழியில் இக்கவிதைகள் பேசுகின்றன. அது இத்தொகுப்பின் பலம். தீவிரமான தன்னுணர்வில் எழுதப்பட்ட சுய தரிசன கவிதையும் உண்டு. மொழியின் வசீகரத்தில் மயங்கி நிற்கும் கவிதைகளும் உள்ளன. கவிஞர் இதில் வரைந்து காட்டும் அன்பின் மாய நிலங்கள் வசீகரம் நிறைந்தவை. சமூகவியல் சித்திரங்களோ தெளிவான சிந்தனைகள் நிறைந்தவை. அமெரிக்க நிலத்தில் நவீன தமிழ் கவிதை துளிர்ப்பது ஓர் ஆரோக்கியமான விஷயம். அருள்ஜோதியின் கவிதைகள் அந்தப் புத்தொளியின் எழுச்சிக்கு ஒரு சோற்றுப்பதமாய் இருக்கின்றன.
- இளங்கோ கிருஷ்ணன்
Be the first to rate this book.