கடவுளை நம்புவதா வேண்டாமா? நினைவுகள் உண்மையா பொய்யா? பூட்டியிருக்கும் கோயிலுக்குள் உட்கார்ந்து கடவுளைப் பார்க்க வேண்டும் என்று வேண்டியபடியே, பயத்தில் கடவுள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம்பியதிலிருந்து, அடிக்கடி தேவாலயத்தில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருப்பதுவரை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடவுளைப் பற்றி எவ்வளவு யோசித்திருக்கிறேனோ, அவற்றின் பின்னெல்லாம் மொழியை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வியும் கூடவே வந்திருக்கிறது. எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக என்னைப் பற்றி, என் பாலினத்தைப் பற்றி, எதைப் பற்றியும் பேசும்போது மொழி மீதான நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் அதன் போதாமைகளும் நுண்மைகளும் மனதிலிருந்தே வந்திருக்கின்றன. தத்துவத்துக்கும் அனுபவத்துக்கும் உள்ள இணைப்புகளைப் புனைவின் கருவிகளைக் கொண்டு நினைவூட்டி, இந்த நாவல் நம்மைக் கேள்விகளால் நிரப்புகிறது. சமீபத்தில் இவ்வளவு உற்சாகமூட்டிய, அழவைத்த, அலைக்கழித்த நாவல் வேறெதுவுமில்லை. உங்களிடமும் பிரார்த்தனைகளோ, மொழி குறித்த கேள்விகளோ இருந்தால் உங்களையும் இந்நாவல் அதே அளவு உற்சாகமூட்டும், அலைக்கழிக்கும்.
- வயலட்
எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்
Be the first to rate this book.