பொட்லியின் மொட்லி, நெற்றியில் பொட்லிக்காய் உடைத்து விளையாடிய பால்யத்தின் குளிர்ச்சியை நினைவூட்டும் கவிதைத் தொகுப்பு. ரசனையை இயல்பெனக் கொண்டவரின் கவிதை வரிகள். எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பையும், சிறு நன்மைக்கே நெகிழ்ந்து போகிற மனசையும் காட்டுகிற இந்தக் கவிதைகளை கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டால் நீங்கள் அழகாகப் புரிந்து கொள்ள முடியும், உரைநடைகளில் தேதி, நேரம் வைத்தனுப்புவதெல்லாம் கவிதையென்றாகிவிட்ட காலத்தில், உள்ளத்தை உள்ளங்கையில் ஏந்திக் காட்டும் எளியவனின் தொகுப்பு இது. ஆனால் நம்மை அசைத்துப் பார்க்கிற சோகமும், எதார்த்தமும், காதலும் எனப் பல்வகை உணர்வுகள் பின்னிக்கிடக்கிற வரிகள் பக்கத்திற்குப் பக்கம் அரும்பி வாசிப்பின் தொடுத்தலுக்காக காத்துக் கிடக்கின்றது. தென்றல் தன் வாழ்வின் நிமிடங்களை எழுத்தில் சேர்த்திருக்கிற விதம் அந்தந்த உணர்வுகளுக்கான தாக்கத்தை நம்மில் ஏற்றிவிடுகிறது. வாசிப்பின் முடிவில் காபி கவிதையில் அவரே எழுதியிருப்பதுபோல் நாம் ஆவதென்னவோ உண்மை. இன்னும் உயரங்கள் காணும் நாளிலும் அக்கவிதையைப் போல சக வாசகியென வாழ்த்த விழைகிறேன்.
-அனுராதா
Be the first to rate this book.