மாமேதை லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் கட்சியின் ஆரம்பகாலத் தோழர்களான புகாரின், புரோயோ பிராஷென்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்டு, உலகம் முழுவதும் ‘பொதுவுடமை என்றால் என்ன?’ என்பதைக் கற்றுத் தருவதற்கான துவக்கநிலை பாடப் புத்தகமாக பல்லாண்டுகாலமாக பயன்பட்ட நூல். மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிகழ்வுகளின் பகுதியாக பாரதி புத்தகாலயம் மீள் பதிப்பு செய்த செவ்வியல் நூல்களின் வரிசையில் The ABC of Communism என்று ஆங்கிலப் பெயரில் வெளிவந்த நூலின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு. காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.
Be the first to rate this book.