பொது சிவில் சட்டம் விஷயத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் இரண்டு பிரிவுகள் மிக முக்கியம்.
1. அரசமைப்புச் சட்டம் பாகம் 3ல் அடிப்படை உரிமைகள் பற்றி வருகிறது.
அதில் 'பிரிவு 44' என்ற வழிகாட்டும் கொள்கைகளைக் குடிமக்கள் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக அவை முழுதும் இந்நூலில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டும் கொள்கைகள் இந்திய அரசியல் சாசனம், பாகம் 4ல் (Part IV) இடம்பெற்றுள்ளன. அத்தனை பிரிவுகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
2. அடிப்படை உரிமைகள் பற்றி வரும் அரசமைப்புச் சட்டம் பாகம் 3ன் 'பிரிவுகள் 25 - 30' மதச் சுதந்திரத்தை உறுதி செய்யும் பிரிவுகள். இவை இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகள்.
இவ்வுரிமைகளை யாரும் எந்நிலையிலும் தட்டிப்பறிக்க முடியாது; உச்ச நீதிமன்றம்கூட! அவையும் நூலில் பின்னிணைப்பாக இடம்பெறுகின்றன.
அதுபோல், முதுபெரும் பத்திரிகையாளரான வீ. டி. இராஜசேகர் 1993ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றும் இதில் பிற்சேர்க்கையாக இடம்பெறுகிறது.
வாசகர்கள் பொதுசிவில் சட்டம் பற்றிய பல கூறுகளைப் புரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவக்கூடும்.
Be the first to rate this book.