நமது அனுபவக் குவியலின் ஒரு கண்ணாடியை அணிந்துகொண்டு, அறிவின் துலாக்கோல்களைக் கையிலெடுத்து ஓர் இசைக் கோர்வையோடு நம்மைப் பிணைத்துக்கொள்ளத் துவங்கினால் நாம் எப்போதுமே இசைக்கு அந்நியமானவர்களாகும் சாத்தியமும் உண்டு.
* நாம் வெறுப்பின் காலத்தில் வசிக்கிறோம் என்பதன் பொருள், வெறுப்பு புதிதாகத் தோன்றி இப்போது அதன் ஆளுகைக்குக் கீழே நம்மைக் கொணர்ந்திருக்கிறது என்பதல்ல. சமூகத்தின் பல்வேறு அங்கங்களின் ஏற்பை (Legitimized) வெறுப்பு பெற்றிருக்கிறது என்பதே அதன் பொருள்.
* பொருட்களின் நீண்டகால வாழ்வு மதிப்புமிக்கதாக இருந்தது போய் குறுகியகால இருப்பே அதன் மதிப்பைக் கூட்டுவதாக உள்ளது. காலத்தின் வேகத்தை இந்தக் குறுகிய காலமே தாக்குப் பிடிக்கும் பொருட்களின் மதிப்பின் வழியாக அதிகரித்திருக்கிறோம்.
* காந்தி அவரது செய்தியாக தனது வாழ்க்கை இருக்கும் எனச் சொன்னார். ஆனால் காந்தியின் மரணம் அவரது வாழ்வை விடவும் மகத்தான செய்தி. அதனை உள்வாங்கி, சிந்தித்து, செயலாற்ற வேறு பொருத்தமான காலம் இப்போதிருப்பதைப் போலக் கனிந்திருக்காது.
Be the first to rate this book.