‘போர் வேண்டாம்’ என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் ‘போர்க்குணம்’ எப்போதும் தேவை; இன்றைய வாழ்வு சூழ்ச்சிகள் நிறைந்த போர்க்களம்.
சிலரது வெடிச் சிரிப்பிற்குப் பின்னால் வெடிகுண்டுகள் ஒளிந்திருக்கும். சிலரது பணிவிற்குப் பின்னால் சதி வேலைகள் மறைந்திருக்கும். தந்திரங்களைத் தெரிந்துகொள்வது அவற்றைக் கையாளுவதற்கல்ல, மற்றவர்கள் கைக்கொள்ளும்போது அவற்றைக் கையாடுவதற்காக.
இன்று போட்டித் தேர்வும் போருக்கு ஒப்பானது. வர்த்தகக் களமும் பந்தயக் களமே! உத்திகள் வகுப்போரே வெற்றிகள் குவிப்பார். வியூகங்கள் வகுப்போரே சோகங்கள் தவிர்ப்பார்.
Be the first to rate this book.