'உமர் இப்னுல் கத்தாபைப் போன்ற ஒரு மனிதர் இந்தியாவிற்குக் கிடைத்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிடும்' என்று காந்திஜி கூறியதாக தகவல் ஒன்று உண்டு.
அதில் ஆச்சரியமே இல்லை. விகல்பமின்றி, முன் முடிவுகள் இன்றி உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும் எவருக்கும் வியப்பும் மலைப்பும் ஏற்படாவிட்டால்தான் ஆச்சரியம்.
எளிய வாழ்க்கையின் உதாரண நாயகரான அவருடைய வரலாறு பிரம்மாண்டம் என்பது இனிய முரண். அவர் இரண்டாம் கலீஃபாவாக ஆட்சி புரிந்தபோது அந்த ஆட்சியின் சுவையான அம்சங்களாக அமைந்திருந்த இரு அத்தியாயங்கள் சிறு தொடராக சமரசம் பத்திரிகையில் வெளிவந்தன. ஒன்று ஊர் உறங்கும் இரவு நேரங்களில் அவர் மதீனாவின் வீதிகளில் புரிந்த உலா. “இரா உலா' என்ற தலைப்பில் அது வெளியானது. அடுத்தது ஆளுநர்களை அவர் தேர்வு செய்ததும் அவர்களுடனான தொடர்புகளும். அந்தத் தொடரின் தலைப்பு ‘அது ஓர் அழகிய பொற்காலம்'. இவை இரண்டும் உள்ளடங்கிய சிறுநூலே இந்த ‘பொற்கால உலா'.
Be the first to rate this book.