’ திடீரென்று நாம் எல்லோரும் சிறுவர்களாக மாறி நம் பள்ளி நாள்களுக்குப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? ’ என்று சொல்லி ஏங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதற்கு ‘ டைம் மெஷின் ‘ வேண்டும். அல்லது ஏதாவது மாயாஜாலம் நடக்கவேண்டும். இரண்டும் இல்லாமல் அதை சாத்தியமாக்கியிருக்கிறது இந்த நாவல்.
சிறிமி பூர்வாவைக் கடந்த காலத்துக்கு அழைத்துப் போகிறார் ஸ்வாமி தாத்தா. அவளுடன் நாமும் பயணம் செய்கிறோம். எதிர்பாராத ஒரு பயணம். பன்னிரண்டு ஆழ்வார்களையும், சிலிர்ப்பூட்டும் சம்பவங்களையும் பூர்வாவுடன் சேர்ந்து நேரில் பார்க்கிறோம்.
பன்னிரு ஆழ்வார்கள் யார் ? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ? அவர்கள் எப்படி ‘ ஆழ்வார்கள் ‘ எனப் பெயர் பெற்றார்கள் ? அவர்களுடைய பெருமைகள் என்ன ? ஒவ்வோரு கேள்விக்குமான பதிலையும் குழந்தைகள் கூட புரிந்துகொள்ளூம் வகையில் மிக எளிமையாகச் சொல்லப்பட்ட அற்புதமான நாவல்.
‘ மேஜிக்கல் ரியலிசம் ‘ என்று சொல்லப்படும் மாயாஜால யதார்த்தவாதக் கதைகள் தமிழுக்குப் புதிதல்ல. ஆனால், சிறுமி பூர்வா, ஸ்வாமி தாத்தா, ஆழ்வார்கள், பறக்கும் கம்பளம், பிரசன்னமாகும் மகாவிஷ்ணு, அற்புதமான திகைப் பூட்டும் சம்பவங்கள்....என விரிகிற இந்தக் களம் மிகப் புதிது.
Be the first to rate this book.