ராமச்சந்திர வைத்தியநாத்தின் கதைகள் அனைத்திலும் கார்க்கி சொல்லிய அந்தந்த “வகை மாதிரி” மனிதர்களைப் படைத்துள்ளார். அவர்களின் நடை உடை பாவனைகளை அப்படியே உரித்து வைத்துள்ளார். அவரால் சேரித் தமிழும் பேச முடியும், சாஸ்திரிகள் பாஷையிலும் உரையாட முடியும். எடுத்துக் கொண்ட பொருளை ஆழ அகலத்துடன் விருப்பு வெறுப்பின்றி சொல்வதால், படிப்பவர் மனம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. உதாரணமாக மதத்தை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தும் வகுப்புவாதத்தில் சிக்கிய ஒரு சாதாரண மனிதனை, இந்தக் கதைகள் சிந்திக்க வைக்கும். தாராளமனமுடைய ஒரு மனிதனை, வெறுப்பு அரசியலிலிருந்து திசை வழிப்படுத்தும். முற்போக்கு கருத்துடையவர்களை, உணர்வு பூர்வமாக அக்கருத்தில் திளைத்திட வழி வகுக்கும்.
Be the first to rate this book.