ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாக 16,800 நாப்கின்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால்தான் இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் நாப்கின்கள் சருமத்தில் காயங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். சிலருக்கு இதனால் தொற்றுகூட ஏற்படுவதுண்டு.
இது உராய்வின்போது காயங்களையும் அரிப்பையும் உண்டாக்கும். மேலும் உறுப்பிற்குச் செல்லும் காற்றைக்கூட தடுத்து நிறுத்திவிடுகிறது. ரேயான் மெட்டீரியல் மூலம் செய்யப்படும் சில நாப்கின்கள் பெண்ணுறுப்பில் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுகிறது. இதனால் தொற்றுகளும் புண்களும் உண்டாகின்றன. துணி நாப்கின்களில் இயற்கையான பஞ்சு உபயோகப்படுத்தப்படுவதால் எந்தவித பாதிப்பும் இல்லை.
Be the first to rate this book.