கவிதை என்றால் அதில் கவி இருக்க வேண்டும். கதை (கற்பனை) இருக்க வேண்டும். விதை(கருத்து) இருக்க வேண்டும். அது படிப்பவர் நெஞ்சில் தைக்க வேண்டும். கருத்து எனும் விதை இல்லையென்றால் கவிதை வெறும் சக்கையாய், மலடாய், மரித்துப்போகும் என்றும், விதைப்பவன் வீரிய விதைகளை விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதற்கு நூலாசிரியரே சாட்சி கூறுகிறார் நூல் முழுக்க. இந்த இலக்கிய மணம் கமழும் “பூநானூறு” நூலில் கவியருவி அப்துல் காதர் அவர்கள் பதிவிட்டுள்ள வரிகள் அவருக்கே இலக்கியம் ஆவதைக் காணலாம். “கவிதை காலமாவதிலிருந்து காப்பாற்றி நிலாச் சக்கரங்களை எதிர்ச்சுற்றி எழிலும் இளமையும் நங்கூரம் பாய்ச்ச வைப்பவன் கலைஞன்” என கலைஞனுக்கு ஓர் ஒப்பற்ற இலக்கணத்தைத் தருவதோடு எழுதுகோல் தலைகீழ் கவத்தால் இலக்கியம் பழமை அடைவதில்லை என்றும் ஒரு புதிய இலக்கணத்தைப் படைத்து நம்மை கவியருவி குளிப்பாட்டி விடுகிறார் கற்பனைச் சாரலில்.
புலவர் வே. பதுமனார்.
Be the first to rate this book.