கலையுலகத்தைக் குறித்து இதுவரை எழுதப்பட்ட நாவல்களில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறது இந்நாவல். கற்பனை முடிவடையும்போது யதார்த்தமும், யதார்த்தம் செயலிழக்கும்போது கற்பனையும் இணைந்து ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன.இரண்டு மாறுபட்ட உலகங்களை ஒன்றிணைக்கும் ஒரு பூனை, தன் விருப்பத்துக்குத் தனியொரு உலகை நம்முன் தோற்றுவிக்கிறது. அதன் சொற்களின் திரைச்சீலையை நீங்கள் விலக்கும்போது இப்பேருலகின் முகச் சாயங்களையும் அரிதாரங்களையும் சேர்த்தே விலக்குகிறீர்கள்.
கதைக்குள் கதை, அதற்குள் வேறு கதை, அந்தக் கதை பேசுகிற இன்னொரு கதை என்று இந்நாவலுக்குள் மாயக் குகையாக விரிந்துகொண்டே போகிறது கலையுலகம். ஒரு பூனையின் கண் பாய்ச்சும் ஒளியால் மட்டுமே இதனைத் தரிசிக்க முடியும்.நவீனத் தமிழ் நாவல் முயற்சிகளில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இன்னொரு புதிய பாய்ச்சல்.
Be the first to rate this book.