பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால், வரப்புகள் என பூமணியின் ஐந்து நாவல் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. தான் கதை சொல்ல எடுத்து கொண்ட வாழ்வும் மொழியும் திருநெல்வேலிச் சுற்று வட்டாரத்தினவை என்றாலும், பூமணி காட்டிச் செல்லும் வாழ்க்கைச் சரித்திரம் என்பது இந்திய நிலப்பரப்பில் எங்குமுள்ள கிராமமும் அதை வாழ்விடமாகக் கொண்ட எளிய மாந்தர்களும்தான். பூமணியின் இந்த ஐந்து நாவல்களும் ஒவ்வொரு வாழ்க்கை வெளியைக் கொண்டிருப்பன. மொத்தமாக வாசிக்கும்போது ஐந்து திக்குகளிலிருந்தும் ஐந்து நிழல்களின் ஆட்டத்தைக் காண்பது போன்று ஒரு மயக்கம் அல்லது துவக்கம் தோன்றுகிறது. அத்தோற்றம் இத்தொகுப்பை அர்த்தப்படுத்துகிறது.
5 Condition of the book i received was satisfactory
Condition of the book i received was satisfactory
AnbuChelvan 13-10-2021 09:30 pm