வாழ்வின் சாரத்தை அடியோடு உறிஞ்சி, நம்மையும் நம் உணர்ச்சிகளையும் அடிமைப்படுத்தும் உத்தியோகத்தையும் பணத்தையும் பெரிதென நினைக்கும் கூட்டத்தின் நடுவே வாழ்கிறோம். இவர்களுக்கு இடையிலிருந்துகொண்டு பார்க்கையில் எனக்கு உங்கள் பூச்சி தொடர் ஒரு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது. ஆன்மிகம் கூட ஒரு புள்ளிக்கு மேல் வியாபாரமாக மாறிவிடுகிறது; அப்படி மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. வெகுஜனக் கூட்டத்திலிருந்து அகதியாக வெளியேறுபவர்களுக்கு எழுத்தாளன் மட்டுமே தன் தோணியுடன் அவர்களை மறுகரைக்குக் கூட்டிச் செல்ல காத்துக்கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட அகதியாகிய எனக்கு உங்கள் தோணியில் இடம் கொடுத்ததற்கு நன்றி என்ற வார்த்தை போதாது.
See things as they are. அது வாக்கியம் அல்ல, அறிவு அல்ல, ஒரு உணர்தல். அது உங்கள் பூச்சி தொடர் மூலம் எனக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.
- கார்த்திக்
Be the first to rate this book.