நம் முன்னோர் இயற்கையை வணங்கினார்கள். மரத்தை வணங்கினார்கள். சூரியனை வணங்கினார்கள். காற்றை வணங்கினார்கள். பறவைகளை வணங்கினார்கள். பட்சியைப் பார்த்தால் கிருஷ்ணா கிருஷ்ணா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். காகங்களுக்கு உணவிடாமல் தான் உண்ணாத கலாச்சாரத்தைக் கொண்டிருந்தார்கள். மண்ணை வணங்கினார்கள். மண்ணை உதைத்தால் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டார்கள். ஏ, பூமியே, உன்னை உதைக்கப் போகிறேன், என்னை மன்னித்துக் கொள் என்று சொல்வதற்காகத்தான் நடனமாடுபவர்கள் மேடையில் ஏறும் முன் மண்ணைத் தொட்டு வணங்கினார்கள். ஆனால் டை கட்டிக்கொண்டு இங்லீஷ் பேசிய மூடர்கள் இவர்களையெல்லாம் பார்த்துக் காட்டுமிராண்டிகள் என்றார்கள். இப்போது இயற்கை அவர்களைத் தீர்த்துக் கட்டுகிறது. தன்னை மதித்தவனின் மீது மட்டும் கொஞ்சம் கருணை காட்டுகிறது.
- புத்தகத்திலிருந்து...
Be the first to rate this book.