முத்து ராஜாவின் பாடல்களில் அமைந்த சிறப்புகள் பல.
பலரும் பாடாத பொருளில் முத்து ராஜா பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடும் பாடல்கள் தாளமிட்டுத் தலையாட்டி ரசிக்க வைக்கின்றன. முற்போக்காளரான அவர், ஓசை நயத்தில் உள்ளடக்கத்தின் வேர் கரைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார். அப்பாவிப் பறவைகளின் குரல்களிலும், விலங்குகளின் நடமாட்டத்திலும் ‘ஆகாது’ சிலவற்றைக் காண்கிறார்கள் சிலர். ஒவ்வொரு ‘ஆகாதும்’ ஒரு பொய். முத்து ராஜாவின் பாடல்கள் இதில் கவனமாய் இருக்கின்றன.
பாடல்கள் சிறார் உலகின் கருவூலம். இடையறாமல் கருவூலத்தை நிரப்பும் கைகள் முத்து ராஜாவின் கைகள்.
சிறார் பாடல் உலகின் ராஜாவான முத்து ராஜாவை அன்புடன் வாழ்த்துகிறேன்.
- ச. மாடசாமி
Be the first to rate this book.