‘உடனிருப்பவன்’ தொகுப்பின் கதைகளைத் தொகுத்தபோது இறுக்கமான மனநிலையிலிருந்து வெளியேறியதான, என் ஆழத்தின் பல சிடுக்குகளைச் சொல்லிவிட்டதான ஓர் எடையின்மை மனதில் தோன்றியது. ஆனால் இத்தொகுப்பின் கதைகளை விட்டு வெளியேறுவது உண்மையில் துயரம் தருவதாக இருக்கிறது. நானே இக்கதைகளின் சிறு தருணங்களை எடுத்து வைத்து அவ்வப்போது கொஞ்சிக்கொள்கிறேன். அந்தக் கொஞ்சலை நீடித்துக்கொள்ளவே நான் இக்கதைகளைத் தொகுக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேனோ என்று தற்போது சந்தேகம் தோன்றுகிறது. ஆனால் எழுதப்பட்ட கதைகள் வாசகர்களுக்கானவை. இவற்றை வாசகர் மத்தியில் கொண்டுவிட்டு இம்மனநிலையிலிருந்து வெளியேறி அடுத்து என்னவாக உருமாற்றம் அடையவிருக்கிறேன் என்று அறிந்துகொள்ள ஒரு மெல்லிய பரவசத்துடனும் நடுக்கத்துடனும் காத்திருக்கிறேன்.
Be the first to rate this book.