தமிழின் தன்னிகரற்ற நாவல் ‘பொன்னியின் செல்வன்’. தமிழில் நிகழ்த்தப்பட்ட சாதனை. எழுத்தாளர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி இதை எழுதி ஏறத்தாழ 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் விற்பனையில் ‘பொன்னியின் செல்வன்’ முதலிடத்தில் உள்ளது. இதிலிருந்தே இந்நாவல் எப்படி தமிழர்களின் வாழ்வில் ஒன்றறக் கலந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிக்கலான ஒரு வரலாற்றை எளிமையாக்கிப் புனைவாகத் தருவது என்பது சவாலான கலை. ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்த பிறகு சோழர்களின் உண்மையான வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியவர்கள் பலர். ஒரு நாவலின் வெற்றியைப் பறைசாற்ற இதைவிட வேறு என்ன தேவை? கல்கியின் எழுத்து ஜாலத்தில் பூங்குழலியும் வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பார்கள். சொற்சுவை, பொருட்சுவை, வரலாற்றுச் சுவை என அனைத்தும் கச்சிதமாகக் கலந்த படைப்பு இது. இந்நாவலைப் படிப்பவர்கள் அனைவரையும், இக்கதை நிகழ்ந்த காலத்துக்கே கூட்டிச் செல்கிறார் கல்கி, ஒரு கால இயந்திரத்தைப் போல.
Be the first to rate this book.