பொதுத் தேர்தல் நடைபெறும் சமயங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் நூதன அவதாரங்கள் எடுக்கிறார்கள் என்று நுணுக்கமாக அணுகி விவரிக்கிறது இந்நூல்.
2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தினமலர் நாளிதழில் வெளியான இக்கட்டுரைகள் அந்தக் காலக்கட்டத்துக்கு மட்டுமல்லாமல், எக்காலத்துக்குமான பாடங்களையும் படிப்பினைகளையும் தருவதே இந்நூல் ஏழாண்டுகள் கழிந்த பின்பும் மறு பதிப்பு காண்பதன் ஒரே அர்த்தம்.
சர்வதேச அரசியல் விவகாரங்களை மட்டுமே எப்போதும் எழுதி வரும் பா. ராகவன் முதல் முறையாக இதில் தமிழ்நாட்டு அரசியலைத் தொட்டுத் துலக்கியபோது எழுந்த பரபரப்பும் ஆரவாரமும் இன்றும் நினைவுகூரப்படுபவை.
Be the first to rate this book.