மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.
ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.
Be the first to rate this book.