கவிதை ஒவ்வொன்றும் 'பொய்கை' மலர் இதழாய் விரிக்கிறது. கருத்துக் கனியை விளைவிளைவிக்கும் மகரந்தப் பொன்துகளாய் மிளிர்கிறது; ததும்பி, துளும்பி நிற்கும் கவிநயத் தேனை வழிந்தோடச் செய்கிறது. மலரில் தேன் நிறைந்திருக்கிறது; சுவைப்பதற்கென சில துளிகள் மட்டும் இங்குச் சொட்டப்பட்டுள்ளன.
சிதம்பரநாதனின் கவிதைப் பொய்கையில் வள்ளலார் எனும் சோதி மலரும், சிலம்பு எனும் காப்பிய மலரும், கம்பன் எனும் மானுட மலரும், பாரதி எனும் பைந்தமிழ் மலரும், காந்தியடிகள் எனும் வாய்மை மலரும் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.
Be the first to rate this book.