வீரப்பன் - தமிழக காவல்துறை வரலாற்றில் மறக்க முடியாத பெயர். வீரப்பன் யார்? எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான் என எந்த விவரமும் தெரியாமலிருந்த கால கட்டத்தில் நான் முதல் முறையாக வீரப்பனை சந்தித்தேன். அவருடன் நேர்காணல் கண்டு அவரையும் அவரது கூட்டாளிகளையும் படமெடுத்து வந்து நக்கீரனில் வெளியிட்டோம். அது வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அலுவலர்களுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, தமிழக - கர்நாடக அதிரடிப்படையினருக்கு வீரப்பன் மீதிருந்த கோபமும் வெறியும் எங்கள் பக்கம் திரும்பியது.
காவல்துறையின் பிடியிலிருந்து நான் எப்படி தப்பினேன், இந்த பொய் வழக்குகளிலிருந்து எப்படி வெற்றி பெற்றோம்? தப்பிக்க எத்தனை ஆண்டுகள் ஆனது, என்மீது எப்படியெல்லாம் பொய்வழக்கு போடப்பட்டது, சிறை என்பது என்ன, மக்களை பாதுகாக்க வேண்டிய சட்டத்தை போலீசார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதைப்பற்றி நான் நேரில் கண்ட நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல்.
Be the first to rate this book.