இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும். இத்தொகுப்பிலும் இரண்டு மக்களுடைய கவிகளும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது.அதுதான் நாம் இன்னும் அடைய முடியாத ஒன்றாகவும் உள்ளது. தேசம், இயற்கை, மொழி, பண்பாடு, தொன்மையான மனிதனின் நாகரிகம் போன்றவற்றை அறிந்துகொள்ள முயல்வது இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியம்.
முற்றிலும் இயற்கையான பசுமையுடனும் நீருடனும் காற்றுடனும் நெருப்புடனும் பறவைகளோடும் விலங்குகளோடும் பிணைந்த இன்னொரு வாழ்க்கையின் மணத்தைப் பூரணமாக உணர்ந்துகொள்ளவும் முடியும். முழுக்கமுழுக்க உணர்விலிருந்து வெளிப்படுகிற மண்பாட்டுக்கள் இவை. ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பழுக்கற்ற வாசனை, ஆணினதும் பெண்ணினதும் கண்களிலிருந்து காதலெனத் தெறிக்கின்றன. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும் அழிவற்றது.
Be the first to rate this book.