இந்தியாவில் பிறந்த குழந்தைகள் பெரும் பாக்கியம் பெற்றவை. காரணம், 'போக்சோ சட்டம்' அவர்களுக்கு ஸ்பைடர் மேனாக இருக்கிறது. "அம்மா அத கொடு, இத வாங்கித் தா" என வீட்டுக்குள் பிடிவாதம் பிடித்து சாதிப்பவர்கள் குழந்தைகள். அவர்கள் பாதிக்கப்படும்போது, அதே பிடிவாதத்துடன் பொதுவெளியிலும் நின்று, "போக்சோ சட்டத்தின் மூலம் உன்னைத் தண்டிப்பேன்" என்று அறைகூவல் விடுக்க வைக்கும் முயற்சியே இந்த 'போக்சோ சாமி' சிறார் நாவல்.
இந்தக் கதையில் 'தமிழினி' சிறுமி ஜேம்ஸ்பாண்டாக மாறி எப்படி பாலியல் சீண்டலில் சிக்கிய சக சிறுவர்-சிறுமியரைக் காப்பாற்றுகிறாள் என்பதை எழுதியிருக்கிறேன். தமிழினிக்குக் கிடைத்த போக்சோசாமி, அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், போக்சோ சட்டத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்வதன் மூலம், அதனைப் பட்டயமாகவும் கேடயமாகவும் குழந்தைகள் மாற்றிக்கொள்ளலாம்.
- கு.கு. விக்டர் பிரின்ஸ்
Be the first to rate this book.