கழுதையுடன் சுற்றிவரும் கவிஞன், தான் கழுதையுடன் உரையாடுவதாகத் தொடங்கி தவிமொழியில், எண்ண ஒட்டங்களில் திளைப்பதாக அமைந்திருக்கிறது இந்த ஸ்பானிய நாவல். நாவல் வடிவத்தில் புதியதொரு பரிமாணத்தைச் சேர்த்திடும் இப்பிரதி, ஆண்டலூஸிய நீரோடைகளையும் குன்றுகளையும் மாதுளைகளையும் பைன் மரங்களையும் ரோஜாக்களையும் பட்டாம்பூச்சிகளையும் காஞ்சனப் பறவைகளையும் அஸ்தமனங்களையும் ஒளியென, இசையென சித்திரித்துக்கொண்டே போகிறது. முடிவின்றி. மிகவும் முட்டாளாயிருப்பது பிளாடெரோவா (அ) கவிஞனா என்பது முடிவு கட்ட இயலாததாயிருக்கிறது. கிழட்டுக் கழுதையும் பெட்டை நாயும் வெள்ளாடும் வெயில் தகிக்கும் கிராமப்புறமும் இமைப் பொழுதில் நம்மை ஈர்க்கக்கூடியனவாகிவிடுகின்றன; தம் உயிர்ப்பையும் ஆற்றலையும் திறந்து காட்டுகின்றன; தீராத சோகமும் வெறுமையும் கொண்டுள்ள ஆன்மாவுக்கு உயிர்ச்சாரமாகின்றன.
Be the first to rate this book.