எழுத்துப்பிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும். எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப் பார்த்து எழுத வேண்டும். எழுதி முடித்ததும் மீண்டும் படித்துப் பார்த்துச் சந்திப் பிழைகள் முதலியன இருப்பின் சரிப்படுத்த வேண்டும். பிழையுண்டாகும் சொற்களை ஒரு பட்டியலிட்டு வைத்துக்கொண்டு அவற்றைச் சிலமுறை பயிலவும், எழுதவும் வேண்டும். சொற்பொருள், சொல்லின்வேர் என்பவற்றையும் அறிய வேண்டும். இவற்றைக் கைக் கொண்டால் எழுத்துப் பிழைகளை அறவே களைந்து விடலாம். களையிருந்தால் விளைவு பெருகாது; பிழையிருந்தால் மதிப்பெண் பெருகாது என்பதை மாணவர் உணர்தல் நன்று.
Be the first to rate this book.