தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது. இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.
Be the first to rate this book.