ராமலிங்கம் தனி உலகில் நுழைந்திருந்தான். இருளாய் தெரிந்த இடமெல்லாம் தூசிப் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. அதன் ஊடே நுழைந்து வெளிவந்தான். காற்றே இல்லாமல் சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றமும் நிசப்தமும் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. சிறு கீற்றெனத் தெரிந்த தூரத்து வெள்ளை வெளிச்சத்தை நோக்கி நகர்ந்தான். உடைந்த காலில் பாரம் கூடிட குனிந்து பார்த்தான். அவன் கால் எலும்பைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தார் பரமசிவம். ''அரிக்குதாப்பா... சொறிஞ்சி வுடவா...'' என்றபடியே ராமலிங்கத்தின் எலும்பை தனியே எடுத்து தேய்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய் அரிப்பு அடங்கியது. திடீரென்று உச்சந்தலைக்குள் எரிச்சல் ஏறியது. 'போதும்' என்று சொல்வதற்காக குனிந்தான். அவன் எலும்பிலிருந்து ரத்தம் பெருகி வழிந்துகொண்டிருந்தது. பரமசிவத்தைக் காணவில்லை.
Be the first to rate this book.