ஆறாவது நூலான பிறழ்வி , அன்புத்தோழி ஜெயஸ்ரீயின் கவிதைப் பயணத்தில் ஒரு பிரதான இலக்கை அடைந்திருக்கிறது.
இலக்கிய உலகின் மொழிதல் முறைகளை, வகைப்பாடுகளை, எல்லாவிதமான நகர்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு, தனக்கான, தன் மன இயல்புக்கான இருப்பை வடிவமைத்துக்கொண்டு தானே கவிதையாக மாறி இயக்கம் கொள்கிறார் ஜெயஸ்ரீ.
அதனால்தான், காதலின் பரிமாணங்களை யதார்த்த மொழியிலும்,
சமூக பிரச்சனையைப் புனைவின் வழி சொல்லலும்,
அரசியல் அவதானிப்பை பகடியில் பதிவதும்,
பெண்ணியத்தை தர்க்கத்தின் வழியில் வாதிடுவதும்,
பெண் உளவியவிலை சிக்கலின்றி உள்பிரதியில் கோடிட்டுக் காட்டுவதும்,
தீர்வுகளை பிரச்சாரமின்றி ஊடுபயிராக விதைக்கவும் முடிகிறது.
சமூகத்தின் காரணிகள் உருவாக்கும் பிறழ்வு பிம்பத்தில் சிக்காமல் தெளிந்த நீரோடையாக மாறி அடியிலிருக்கும் மூன்றாவது கரையை நம் முன் வைக்கிறார். கவிதைவெளியில் ஆகச் சிறந்த கவிஞராக மறுதலிக்க முடியாத இடத்தில் நின்று, தன்னிருப்பை அறிவித்தப்படி, சிறப்பாக அடையாளப்படுகிறார்.
தமக்கான சிம்மாசனத்தைத் தாமே செதுக்கிக் கொள்ளும் வல்லமை பெற்ற கவிதைகள் இவையென்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அமிர்தம் சூர்யா
( எழுத்தாளர் – பத்திரிக்கையாளர்)
Be the first to rate this book.