ஜமாலன் விமரிசனமுறையி்ல் தமிழ் வாழ்வு நோக்கிய அகண்டாகாரப் பாய்ச்சல் இருப்பதை இந்நூலின் பல கட்டுரைகள் நேரடியாகவும், சில மறைமுகமாகவும் குறிப்பிடு கின்றன. மொத்தத்தில் சொன்னால், 21-ஆம் நூற்றாண்டின் புது இலக்கிய விமரிசனச் சிந்தனை மிகுந்த ஆரோக்கியத்துடன் தமிழ்ச்சூழல் ஒன்றில் மட்டுமே உள்ளது. அதாவது படைப்பின் அர்த்த அடுக்குகளுக்குள் செல்வதே விமரிசனம் என்கிற புதுவித Shift ஒன்று தமிழ்த் திறனாய்வுக் களத்தில் இன்று நிகழ்ந்துள்ளது. அதன் மிகமுக்கியமான பிரதிநிதி ஜமாலன் என்று சொல்வதற்கு எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.
- தமிழவன்
Be the first to rate this book.